மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகள் பயன் பெறலாம்

மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்க, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இத்திட்டம் 2018-2019ம் ஆண்டில் ரூ1.01 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார்போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைபிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி வகை செய்யப்படும்.
நடப்பாண்டு தோட்டக்கலை சார்ந்த பண்ணயத்தின்கீழ் விவசாயிகள் மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ25/- ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.

மேலும் குறைந்த காலத்தில் நிறைய வருவாயை ஈட்டித்தர பசுமைக் குடில்கள்,நிழல்வலை கூடாரம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

விவசாய உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன தொலில் நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதனைப் பற்றி தகவலறிந்து பயன்பெற பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அளுவல்கத்தை அணுகலாம்.

Comments