ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு அரியவாய்ப்பு :

நுண்ணீர் பாசனத்திட்டம் 2017-2018 ரூ 2018-2019 (ஈரோடு வட்டாரம்) :-
🍃 பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா மூலம் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஈரோடு வட்டாரத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

குறிக்கோள் :

🍃 நுண்ணீர் பாசன பரப்பை அதிகரித்து நீர் பயன்பாட்டுத்திறனை உயர்த்துதல்.

🍃 பயிர் உற்பத்தி திறனை அதிகரித்தல்.

🍃 குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்தல்.

🍃 வேளாண்மையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.

அவசியம் :

🍃 சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிருக்கு தேவையான நீர், உரம், பயிரின் வேர்பகுதிக்கு மட்டும் வழங்கப்படுவதால் உர விரயம், நீர் விரயம், தடுக்கப்படுவதுடன் களையின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்பட்டு கூலி ஆட்கலின் தேவை குறைகிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது.

🍃 சிறு குறு விவசாயிகளுக்கு 100மூ மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75மூ மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம்.

தேவையான ஆவணங்கள் :

🌿 விவசாயி புகைப்படம், குடும்ப அட்டை நகல், சிட்டா சுளுசு நகல், அடங்கல் நகல், நில வரைபடம் குஆP ரூ வுழுPழு ளுமநவஉh, கிணறு ஆவணம், ஏயுழு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், ஆதார் அட்டை நகல்.

மானிய விபரம் : (ஒரு எக்டருக்கு)

🌿 கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், பயறுவகைகள் போன்றவற்றிற்கு (இடைவெளி 1.2ஓ0.5 மீட்டர்) நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய விலை ரூ.1,19,194 ஆகும்.

🌿 கரும்பிற்கு மட்டும் (இடைவெளி 1.5ஓ0.6 மீட்டர்) நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய விலை ரூ.86,700 ஆகும்.

🌿 தென்னைக்கு (இடைவெளி 8ஓ8 மீட்டர்) நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய விலை ரூ.29,258 ஆகும்.

🌿 இந்த பயனை பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஈரோடு என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
வேளாண் குறிப்பு !!

🍂 யு+ரியா மாதிரியான ரசாயன உரத்தை பயன்படுத்துவதை விட, அகத்தி விதையை பயன்படுத்தலாம். இந்த அகத்திச் செடியை நிலத்தில் விதைத்தால், காற்றில் இருக்கின்ற தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும்.

🍂 அகத்திக் கீரையை மாடுகளுக்குக் கொடுத்தால், விவசாய வேலைகளும் எளிமையாக நடக்கும். சத்தான பாலும் கிடைக்கும்.

🍂 அகத்தியின் மூலம் மாடுகளிடமிருந்து கிடைக்கும் சாணத்தை வயலில் போட்டால், விளைச்சலும் குறைவில்லாமல் கிடைக்கும்.

Comments