6 வருடத்தில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு இந்தியாவில் உருவாகும்:

இந்தியாவில் ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான பருவ மழை பற்றாக்குறை கணிப்புகள் 10 சதவீத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், 6 வருடத்தில் காணாத வறட்சி இந்தியாவில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான எல் நினோ பருவநிலையும் அதிகளவில் குறைந்து காணப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
விவசாயம் பாதிப்பு:
  இப்பருவமழை பற்றாக்குறையினால் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் மொத்த விவசாய நிலத்தில் 50% அதிகமான விளைநிலங்கள் மழை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும். 
பணவீக்கம்:
  இதனால் இந்தியாவில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்வது மட்டும் அல்லாமல், உணவு பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்திய பொருளாதாரம்:
  2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்து உள்ளது. மேலும் இத்துறையை நம்பி 125 கோடி இந்திய மக்கள் உள்ளனர். 
வானிலை ஆய்வுத் துறை:
  17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழையில் அதிகளவிலான மாற்றம் எதுமில்லாமல் நிலையான மழையைப் பதிவு செய்யும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி:
  நிலையான மழை பதிவால் பருத்தி, எண்ணெய் விதைகள், நெல் மற்றும் தானியங்களின் உற்பத்தி அளவு பாதிக்காமல் உயர்வு நிலையை அடையும்.
கணிப்புகள்:
  கடந்த வாரம் ஜூன் - செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 9% மட்டுமே கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதன் அளவு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது விவசாய உற்பத்தியில் அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது.


Comments