பட்ஜெட் 2018-ல் விவசாய துறைக்கு கிடைத்து என்ன?

விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்றும் 2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம் என்றும் விவசாயத் துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 
  விவசாயப் பொருட்கள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அதிகரிக்கப்படும், விவசாயிகளுக்கு நல்ல நாள் வந்துகொண்டு இருக்கிறது, விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாகப் பணம் ஈட்ட வகைச் செய்துள்ளோம் என்றும் அறிவித்துள்ளார். 



  கிரமங்கள் - வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை, இயற்கை விவசாயத்தினை விரிவுபடுத்த நடவடிக்கை. வேளாண் உற்பத்தி பொருட்களைப் பதப்படுத்த 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மலர்களில் இருந்து வாசனைத் திரவங்கள் எடுக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கான கடன் அட்டைத் திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம். மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்.
  ஆப்ரேஷன் க்ரீன் என்ற பசுமை திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு. ஜேட்லியின் அறிவிப்பை மேஜை தாட்டி பிரதமர் மோடி வரவேற்றுக்கொண்டு இருந்தார். பயிற் கடனுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.          இணையதள வசதி: 
  1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி, பட்ஜெட் 2018: மருத்துவ துறைக்கு கிடைத்த சலுகைகள். 5 லட்சம் ஊரகப் பகுதிகளில் ''வை-ஃபை'' ஹாட் ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்படும்.

Comments